BEL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
BEL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
BEL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கவும்..!
BEL நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Deputy General Manager பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Deputy General Manager (DGM)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Deputy General Manager பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Deputy General Manager கல்வித் தகுதி:

Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication / Electrical ஆகிய பாடப்பிரிவில் B.E, B.Tech மற்றும் Post Graduation Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Deputy General Manager அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் போர்டு கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் IHQ / MoD(N) / Command HQs போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 17 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Deputy General Manager வயது வரம்பு:

DGM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய நாளின் படி, 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BEL சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

பணியாளருக்கு DA, HRA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.

BEL தேர்வு செய்யும் விதம்:

Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.06.2022) தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!