“பாரதி கண்ணம்மா” வெண்பா மதம் குறித்து ரசிகரின் பதிவு – பரினாவின் பதிலடியால் சர்ச்சை!

0
"பாரதி கண்ணம்மா" வெண்பா மதம் குறித்து ரசிகரின் பதிவு - பரினாவின் பதிலடியால் சர்ச்சை!
“பாரதி கண்ணம்மா” வெண்பா மதம் குறித்து ரசிகரின் பதிவு – பரினாவின் பதிலடியால் சர்ச்சை!

“பாரதி கண்ணம்மா” சீரியல் மூலமாக பிரபலமடைந்து வந்த நடிகை பாரினாவை ரசிகர் ஒருவர் அவர் செய்யும் போட்டோஷூட் பற்றி கேள்வி கேட்க, அதற்கு பாரினா சர்ச்சையான பதில் ஒன்றினை கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை பாரினா ஆசாத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் தனது வில்லத்தனத்தால் பெயர் பெற்றவர் தான், நடிகை பாரினா அசாத். வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாரினா பல தந்திரங்களை செய்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர விடாமல் செய்கிறார். இவர் வில்லியாக இருந்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்படியாக இருக்க, இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனை சில நாட்களுக்கு முன்பாக தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

‘ராஜா ராணி’ சஞ்சீவ், ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா இணையும் புதிய சீரியல் – சன் டிவி அப்டேட்!

அதே போல் தொடர்ந்து வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதனை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பலர் எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து போட்டோஷூட் நடத்த வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர். அதே போல் இந்த சமயத்தில் இது போன்ற போட்டோஷூட் நடத்துவது தவறு என்றும் அது குழந்தைக்கு ஆபத்தாக கூட முடியலாம் என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், இதனை ஒரு பொருட்டாக கூட பாரினா எடுத்து கொள்ளவில்லை. தனக்கு இது பிடித்து இருக்கிறது என்ற பாணியில் தான் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது ரசிகர் ஒருவர் பாரினாவிடம், ‘உங்கள் மதத்தை பொறுத்தவரை பல வரைமுறைகள் இருக்கும். அப்படி இருக்க, எப்படி நீங்கள் நடிக்க வந்தீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பாரினா ‘எனக்கு மதத்தின் மீது நம்பிக்கை கிடையாது. அது குறைகூறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினை பற்றி இவர் சர்ச்சையான பதில் அளித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!