‘ராஜா ராணி’ சஞ்சீவ், ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா இணையும் புதிய சீரியல் – சன் டிவி அப்டேட்!

0
'ராஜா ராணி' சஞ்சீவ், 'யாரடி நீ மோகினி' சைத்ரா இணையும் புதிய சீரியல் - சன் டிவி அப்டேட்!
'ராஜா ராணி' சஞ்சீவ், 'யாரடி நீ மோகினி' சைத்ரா இணையும் புதிய சீரியல் - சன் டிவி அப்டேட்!
‘ராஜா ராணி’ சஞ்சீவ், ‘யாரடி நீ மோகினி’ சைத்ரா இணையும் புதிய சீரியல் – சன் டிவி அப்டேட்!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் கயல் என்ற மெகா தொடரில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இந்நிலையில், அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.

‘கயல்’ மெகா தொடர்:

தற்போது சீரியல்களில் என்ன தான் புது புது சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பினாலும், தமிழ் சீரியல்களின் முன்னாடியாக இருந்த சேனல் சன்டிவி தான். தற்போதும் சன்டிவியில் பல தொடர்கள் பிரபலமாக தான் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் TRP டாப் 10 வரிசையிலும் பல தொடர்கள் உள்ளது. குறிப்பாக சன் டிவியின் ரோஜா, வனத்தைப்போல, கண்ணான கண்ணே தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.

Money Heist வெப் சீரிஸை கண்டுகளிக்க ஊழியர்களுக்கு விடுமுறை – ஐடி நிறுவனம் அதிரடி!

இந்நிலையில் தற்போது கயல் என்ற புதிய மெகா தொடர் ஒன்றை சன் டிவி தயாரித்து வருகிறது. இந்த தொடரில், ஹீரோவாக ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சஞ்சீவ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் வில்லத்தனத்தில் ரசிகர்களை மிரட்டிய சைத்ரா ரெட்டி நடிக்கிறார். இவர்களின் ஜோடிக்கு சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இவர்களை தவிர இந்த தொடரில் நடிக்கும் மற்றவர்களை பற்றிய விவரம் ஏதும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், கயல் ஷூட்டிங் ஸ்பாட் ல் பல முக்கிய நடிகர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. அதில் மீனா குமாரி, வெங்கட், அவினாஷ், அபினவ்யா, வருண், சுமங்கலி ஜானகி தேவி போன்ற பல பிரபலங்கள் உள்ளனர். இதனால் சீரியலின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!