பாரதி மனதை மாற்றும் வெண்பா, குழந்தைகளுக்காக உண்மையை நிரூபிக்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

0
பாரதி மனதை மாற்றும் வெண்பா, குழந்தைகளுக்காக உண்மையை நிரூபிக்கும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
பாரதி மனதை மாற்றும் வெண்பா, குழந்தைகளுக்காக உண்மையை நிரூபிக்கும் கண்ணம்மா - இன்றைய எபிசோட்!
பாரதி மனதை மாற்றும் வெண்பா, குழந்தைகளுக்காக உண்மையை நிரூபிக்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மீது தவறு இருப்பதாக வெண்பா பாரதி மனதில் பதியும்படி பேசுகிறார். பின் கண்ணம்மா குழந்தைகளுக்கு அப்பா வேண்டும் என நினைத்து புதிய முடிவு ஒன்றை எடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பாரதியிடம் பேசிக் கொண்டிருக்க, அந்த கண்ணம்மா உடன் எப்படி சேர்ந்து இருந்தாய் என கேட்கிறார். உனக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்திருக்கா அவளுடன் ஒன்றாக இருக்க எப்படி தான் மனம் வந்ததோ என வெண்பா கேட்க, கோர்ட் ஆர்டர் என்ன செய்ய சொல்கிறாய் என பாரதி கேட்கிறார். யார் என்ன சொல்லிருந்தாலும் அவளுடன் நீ சேர்ந்து வாழ கூடாது என சொல்ல, பாரதி வருத்தப்படுகிறார். அந்த கண்ணம்மா செய்த தவறை எல்லாம் மன்னித்து நான் சேர்ந்து வாழ தயாராக இருந்தேன் அவள் தவறு செய்ததை ஒப்புக் கொள்ள தான் சொன்னேன் ஆனால் அவள் முடியாது என சென்றுவிட்டாள் என பாரதி சொல்ல, நல்ல வேலை என வெண்பா நினைக்கிறார்.

பின் பாரதியிடம் நீ என்ன அவ்வளவு பெரிய தியாகியா இல்லை தான ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க, இனிமேல் உனக்கு நான் இருக்கிறேன் நீ எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என வெண்பா சொல்லி பாரதி மனதை மாற்றுகிறார். பின் அகில் சௌந்தர்யாவிடம் அண்ணி என்ன சொன்னார்கள் என பேச அவள் கோவத்தை எங்கே காட்டுவது என தெரியாமல் என்னிடம் காட்டினாள், எல்லா கஷ்டத்தையும் என்னிடம் கொட்டிவிட்டால் என சொல்ல, அப்போது பாரதி வருகிறார். அவர் மல்லிகாவை அழைத்து நன்றாக சமைக்கும்படி சொல்ல, சௌந்தர்யா இங்கே எதற்கு வந்தாய் கோர்ட் ஆர்டர் என்ன ஆனது என கேள்வி கேட்கிறார். நான் இங்கே வர கூடாதா என கேட்க, கோர்ட் ஆர்டர் அவ்வளவு தான என சௌந்தர்யா கேட்கிறார்.

ஆனால் பாரதி நான் இனிமேல் இங்கே தான் இருக்க போகிறேன் ஹேமாவிற்கு அப்பாவாக என சொல்ல, சௌந்தர்யா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் கண்ணம்மா லட்சுமி ஹேமாவை நினைத்து பார்க்கிறார். ஹேமாவை அழைத்து கொண்டு வந்தால் என்னுடைய இரண்டு பெண்களும் அப்பா இல்லாமல் இருப்பார்கள். இப்போதைக்கு ஒரு குழந்தையாவது அப்பா உடன் இருக்கட்டும் என நினைக்க ஆனால் அவரை அப்படியே விடக்கூடாது என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா என்பதை நிரூபிக்க வேண்டும் என சொல்லி அவருடைய பொருள்களை நமே கொண்டு சென்று கொடுப்போம் என கிளம்புகிறார்.

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் உத்தரவு !

அப்போது லட்சுமி தூங்குவதால் குமாரை போன் செய்து வர வைக்கிறார். பொருள்களை எடுத்து வைக்க லட்சுமி முழித்து விடுகிறார். நான் வெளியே போறேன் நீ படு என கண்ணம்மா சொல்ல லட்சுமி மீண்டும் தூங்குகிறார். கண்ணம்மா பாரதி வீட்டில் அவருடைய ரூமிற்கு செல்ல அங்கே ஹேமா விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் கண்ணம்மாவை பார்த்து சமையல் அம்மா என சொல்லிக் கொண்டே வர என்ன பெட்டி உடன் வந்திருக்கீங்க இனி இங்கே தான் இருக்க போறீங்களா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை என சொல்ல, கீழே சென்று பாட்டியை வர சொல்கிறார். பாரதி பெட்டி உடன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here