பாரதிக்கு ஆதரவாக இருக்கும் ஹேமா, லட்சுமி அப்பா பற்றி பாரதியிடம் கேட்க சொல்லும் வடிவு – இன்றைய எபிசோட்!

0
பாரதிக்கு ஆதரவாக இருக்கும் ஹேமா, லட்சுமி அப்பா பற்றி பாரதியிடம் கேட்க சொல்லும் வடிவு - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு ஆதரவாக இருக்கும் ஹேமா, லட்சுமி அப்பா பற்றி பாரதியிடம் கேட்க சொல்லும் வடிவு - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு ஆதரவாக இருக்கும் ஹேமா, லட்சுமி அப்பா பற்றி பாரதியிடம் கேட்க சொல்லும் வடிவு – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சௌந்தர்யா பாரதியை பிறந்தநாள் விழாவிற்கு வர சொல்ல பாரதி கோபப்படுகிறார். பின் லட்சுமி அப்பா பற்றிய ஆசைகளை சொல்ல, வடிவு அந்த டாக்டர் அங்கிளிற்கு உன் அப்பா பற்றி தெரியும் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யாவிடம் பாரதி உங்க கண்ணம்மா என்ன சொன்னார் என கேட்க உன்னிடம் சொல்லிவிட்டு தான போனால் என சொல்கிறார். உனக்கு அப்படி உதவி செய்ய வேண்டும் என நினைத்தால் நீ அவளுடைய பிறந்தநாள் விழாவிற்கு வா என சொல்ல உடனே கோவப்பட்டு பாரதி சத்தம் போடுகிறார். உடனே சௌந்தர்யா நான் என்ன செய்தேன் என கேட்க எல்லாம் நீங்க தான் செய்கிறீர்கள் லட்சுமி அப்பா யார் என கேட்டால் என்னை தான் சொல்வாள் இப்படி தான் என்னை கஷ்டப்படுத்துகிறீர்கள் என சொல்கிறார்.

அப்போது ஹேமா வர இந்த வீட்டில் வருத்தப்பட்டு பாரதி பேசும் போது கேட்டுவிடுகிறாள். இந்த வீட்டில் யாரும் என் பக்கம் பேசவே இல்லை என சொல்கிறார். பாரதி சாப்பிடாமல் சென்றுவிட சௌந்தர்யா சாப்பிட சொல்கிறார். பின் பாரதி வேண்டாம் என கிளம்புகிறார். ஹேமா அதை எல்லாம் கேட்டுவிட்டு ஏன் என் அப்பாவை சத்தம் போடுறீங்க என கேட்கிறார். அவன் தான் எங்களிடம் சண்டை போடுவதாக சொல்ல நான் தான் பார்த்தேனே நீங்க அவருக்கு மட்டும் சாப்பாடு வைக்கவில்லை என சொல்கிறார்.

தமிழகத்தில் இம்மாதம் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை – காரணம் இதுதான்!

மறுபக்கம் லட்சுமி அப்பா பற்றி கண்ணம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க வடிவு வருகிறார். அப்போது லட்சுமி அப்பாவிற்கு ட்ரெஸ் எடுக்க வேண்டும் என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். உடனே லட்சுமி அழ தொடங்குகிறார். இத்தனை வருஷம் கழித்து நான் அப்பாவை பார்க்க போகிறேன் ஆனால் என்னை நீ திட்டிக் கொண்டே இருக்கிறாய் என சொல்லி வருத்தப்பட கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அப்போது வடிவு என்ன பிரச்சனை என கேட்க அப்பாவிற்கு ப்ளஸ்க் வைக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் அதெல்லாம் முடியவில்லை என சொல்கிறார்.

அப்பா மீது ஆசையால் தான் இதை கேட்கிறேன் மத்த பசங்க எல்லாரும் விலை அதிகமான பொருள்கள் கேட்கிறார்கள் நான் அப்பா பற்றி மட்டும் தான கேட்கிறேன் என சொல்ல, உடனே வடிவு உன் அப்பா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த டாக்டர் அங்கிளிடம் கேளு என சொல்கிறார். என்னது டாக்டர் அங்கிளிற்கு இது பற்றி தெரியுமா என கேட்க ஆமாம் என வடிவு சொல்கிறார். பின் கண்ணம்மா என்ன அக்கா இப்படி சொல்லிடீங்க என கேட்க கேட்கட்டும் அப்போ தான் அவர் என்ன பதில் சொல்வார் என தெரியும் என சொல்கிறார்.

மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!

பின் பாரதி சாப்பிடாமல் இருக்க சௌந்தர்யா சாப்பிட வர சொல்கிறார். ஆனால் பாரதி வேண்டாம் என சொல்ல சௌந்தர்யா அழுது கொண்டே இருக்கிறார். அப்போது ஹேமா சாப்பாடு கொண்டு வந்து மீண்டும் மீண்டும் என் அப்பாவை திட்டாதீர்கள் நானே என் அப்பாவிற்கு சாப்பாடு கொடுக்கிறேன் என சொல்லி பாரதிக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறார். அப்போது பாரதி ஹேமாவின் பாசத்தை பார்த்து அழுது கொண்டே சாப்பிடுகிறார். மறுபக்கம் லட்சுமி அப்பா கண்டிப்பாக வருவாரா என கேட்க வருவார் என கண்ணம்மா சொல்கிறார். அன்னைக்கு மாதிரி சத்தியத்தை காப்பாற்ற முடியவில்லை என சொல்ல மாட்டியே என கேட்க சொல்லமாட்டேன் என கண்ணம்மா சொல்ல, அப்பா பற்றி பேசிக் கொண்டே லட்சுமி தூங்குகிறார். நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என கண்ணம்மா நினைக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!