‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடியப்போகும் குஷியில் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரோஷினி. அவரை சீரியல் முழுவதும் புடவையில் குடும்ப பெண்ணாக மட்டும் பார்த்த ரசிகர்களுக்கு மாடல் உடையில் துறுதுறுவென இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கண்ணம்மா ரோஷினி:
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கண்ணம்மா தவறு செய்திருக்க மாட்டார் என பாரதி உணர்ந்தது போல காட்டப்படுகிறது. மேலும் சிறு வயதில் இருந்தே கண்ணம்மா கருப்பாக இருப்பதால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறார். மேலும் அவர் தாவணி புடவையில் எண்ணெய் தேய்த்து தலை சீவி மட்டுமே காட்டப்பட்டுள்ளார்.
கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்பிரியன் அவர் முதலில் சாப்ட்வெர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் பதிவு செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் மாடல் உடைகளில் நடனம் ஆடி வீடியோக்களை பதிவு செய்வது வழக்கம். பொதுவாக குடும்ப பெண்ணாக மட்டுமே கண்ணம்மாவை பார்த்த ரசிகர்களுக்கு மாடல் உடையில் அவரை பார்த்ததும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
காதலை வெளிப்படுத்தும் சரவணன் & சந்தியா, கோபத்தில் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
மேலும் மாடல் உடையில் மான் போல துள்ளி குதித்து வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், சில நெட்டிசன்கள் கண்ணம்மா சந்தோஷத்தில் துள்ளி விளையாடுவதை பார்த்து, சீரியல் முடியப் போகுதா என்று கேள்வி எழுப்பி கண்ணம்மாவை கலாய்த்து வருகிறார்கள். சாக்லேட் பிரவுன் நிறம், வழிய எண்ணெய் தேய்த்து வாரி பின்னிய ஜடை, கண்கள் நிறைய மை, பாந்தமாக சேலை கட்டி ரசிகர்களை ஈர்த்து வரும் கண்ணம்மா, மாடல் உடையிலும் அழகாக தான் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.