‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா – ஏற்க மறுக்கும் ரசிகர்கள்! கடைசி எபிசோட் எப்போது?

1
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா - ஏற்க மறுக்கும் ரசிகர்கள்! கடைசி எபிசோட் எப்போது?
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா - ஏற்க மறுக்கும் ரசிகர்கள்! கடைசி எபிசோட் எப்போது?
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா – ஏற்க மறுக்கும் ரசிகர்கள்! கடைசி எபிசோட் எப்போது?

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் டாப் சீரியலாக பாரதி கண்ணம்மா இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில், எப்போது இருந்து புதிய கண்ணம்மா வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆக இருந்தாலும் நாடு முழுவதும் பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு எப்போது உண்மை தெரிய வரும்? பாரதி DNA டெஸ்ட் எப்போது எடுப்பார்? வெண்பா பற்றி உண்மை எப்போது தெரியும்? உள்ளிட்ட பல எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.

செழியனால் உருவாகும் பிரச்சனை – முடிவுக்கு வருமா கோபியின் நாடகம்? வேகம் எடுக்கும் ‘பாக்கியலட்சுமி’ கதைக்களம்!

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக மாடல் நடிகையான வினுஷா என்பவர் நடிக்க தொடங்கி விட்டார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 23ம் தேதியுடன் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் ஷுட்டிங்கை முடித்து விட்டு விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 வருடங்களுக்கு பிறகு தொடங்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? ரசிகர்கள் ஷாக்!

அதனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து புதிய கண்ணம்மா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலான வரும் வாரத்திற்கான பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதனால் அவர் இந்த வாரம் ரோஷினி மாற்றப்பட மாட்டார் என தெரிகிறது. இதனால் நவம்பர் 7ம் தேதிக்கு பிறகு வரும் எபிசோட்களிலேயே புதிய கண்ணம்மாவாக வினுஷா என்ட்ரி ஆவார் என கூறப்படுகிறது. மேலும் புதிய கண்ணம்மாவுடன் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியான நிலையில் அதை பார்த்து பழைய கண்ணம்மா ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!