பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் புதிய ட்விஸ்ட்!

0
பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் புதிய ட்விஸ்ட்!
பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் புதிய ட்விஸ்ட்!
பாரதி தான் அப்பா என்ற உண்மையை சொன்ன கண்ணம்மா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் புதிய ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் எப்போதும் போல் ஒரு முக்கிய காட்சியை நோக்கி கதை நகர்ந்து வரும். அது போல, கண்ணம்மாவின் பிறந்த நாள் குறித்து அனைவரும் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், அன்று யாரும் எதிர்பார்க்காத புதிய திருப்பம் ஒன்று கதையில் நடந்துள்ளது.

உண்மையை கூறிய கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா தொடர் இத்தனை வருடங்களை கடந்தும் முன்னனியில் உள்ளதற்கு காரணமாக உள்ள கதைக்களம், சற்று புதிய பாதையில் சென்று வருகின்றது. இத்தனை நாட்களாக லக்ஷ்மியின் அப்பா யார் என்ற உண்மையை சொல்லாமல் இருக்கும் கண்ணம்மா தன் பிறந்த நாள் அன்று லக்ஷ்மியின் அப்பா கட்டாயம் வருவார் என்றும், அவர் யார் என்பதை தான் சொல்லப்போவதாகவும் சொல்லியிருந்தார் கண்ணம்மா.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

இதனால் கண்ணம்மாவின் பிறந்த நாளை லட்சுமி மிகவும் எதிர்பார்த்து வருகிறாள். ஆனால் கண்ணம்மா என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் சிக்கலில் மாட்டி விட்டது போல் உணர்கிறாள். இதனால் பாரதியை எப்படியாவது வரவழைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் பாரதி முதலில் வரமாட்டேன் என்று சொல்லி விட்டு கடைசியாக கண்ணம்மா பிறந்த நாள் விழாவிற்கு வந்து விடுகிறார். இதனால் கண்ணம்மா தனது குழந்தை தான் ஹேமா என்ற உண்மையை பாரதியிடம் சொல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அது எல்லாம் பொய் என்று பாரதி சாதாரணமாக சொல்லி விடுகிறார்.

விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரும் கோபி? பாக்கியாவின் முடிவு என்ன? ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

இதனால் கண்ணம்மா விழிபிதுங்கி நிற்கையில் லக்ஷ்மியின் அப்பா என்ற கேள்விக்கு பாரதி தான் உன் அப்பா என்று சொல்லி விடுகிறாள் கண்ணம்மா. இதனால் அதிர்ச்சி அடையும் பாரதி கண்ணம்மா சொல்லி விட்டாளே என்று கோவமடைகிறார். பாரதி இனி என்ன செய்ய போகிறான் என்று குடும்பத்தினர் மற்றும் கண்ணம்மா உட்பட அனைவருமே குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் பாரதி என்ன செய்ய போகிறான் என்ற ட்விஸ்ட் இனி தான் சீரியலில் வர இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here