‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா பரீனாவிற்கு பிரசவம் – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவிற்கு இந்த வாரம் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவில்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் TRP ரேட்டிங் சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கிறது. இதில் பாரதி மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக வில்லி வெண்பா முக்கிய பங்கு வகிக்கிறார். வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். 7 மாதமாக இருக்கும் போது அதை போட்டோஷூட் மூலமாக ரசிகர்களுக்கு அவர் தெரிவித்தார். தற்போது அவர் 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
ராதிகாவிற்காக பாக்கியாவை பிரிய முடிவு செய்த கோபி – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
இந்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆனால் சீரியலில் இடைவெளி எடுக்காமல் தொடர்ந்து அவர் நடித்து வருகிறார். சீரியல் குழுவினர் அவர் வயிறு தெரியாமல் இருக்க பல ஏற்பாடுகளை செய்தனர். குழந்தை பிறப்பதற்கு பின் அவர் சீரியலில் இருந்து விலகிவிடுவாரா என பலருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் சீரியலில் இருந்து விலகப் போவது இல்லை எனவும், குழந்தை பிறப்பது வரை இடைவெளி எடுத்துக் கொண்டு சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து செய்யும் காரியம் – வைரலாகும் வீடியோ!
தனது கணவருடன் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய அவர் குழந்தை இந்த வாரத்தில் பிறக்க இருப்பதால் அவர் இந்த வார படப்பிடிப்பிற்கு மட்டும் போகவில்லை என தெரிவித்துள்ளார். அவருக்கு நலமுடன் குழந்தை பிறக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொழில் மற்றும் குடும்பம் என இரண்டிலும் அவர் சிறப்பாக இருப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அவருக்கு என்ன குழந்தை பிறக்கும் என ஆவலுடன் அவரது ரசிகர்கள் இருக்கின்றன.