‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் சீமந்த நிகழ்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் சீமந்த நிகழ்ச்சி - வைரலாகும் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் சீமந்த நிகழ்ச்சி - வைரலாகும் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் சீமந்த நிகழ்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடித்து வரும் நடிகை பரினாவுக்கு தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பரினா மற்றும் அவரது கணவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகையின் சீமந்தம்

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல் என்றாலும், ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலும் அது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. அதாவது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கூடிய ஒரு யுக்தியை விஜய் தொலைக்காட்சி பாலோ செய்து வருகிறது. அதே போல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் அல்லது நிகழ்ச்சியில் தோன்றும் புதியவர்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அதிகமானது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் வில்லியும், விஜய் டிவிக்கு புதுமுகமான பரினாவுக்கும் மக்கள் கொடுத்த ஆதரவு அநேகம்.

சரவணனை போலி போலீசிடம் இருந்து காப்பாற்றும் சந்தியா – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!!

விஜய் டிவிக்கு வரும் முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பரினாவுக்கு, ரசிகர்கள் மத்தியில் ஒரு நிலையான இருப்பிடத்தை கொடுத்தது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இந்த தொடரில் வில்லியாக நடித்து வந்தாலும், விஜய் டிவி சீரியலில் வில்லி என்றால் அது பரினா தான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தற்போது அவர் வளர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 2 வருடங்களாக பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனது பங்களிப்பை கொடுத்து வரும் பாரினா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்னாக தான் இந்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட அவருக்கு தற்போது சீமந்தம் நடைபெற்றுள்ளது.

TN Job “FB  Group” Join Now

சமீபகாலமாக, கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த பரினா, சீமந்த நிகழ்ச்சியில் கணவருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்துள்ள இந்த சீமந்த நிகழ்வில் கோல்டன் நிறத்தில் புடவையணிந்து பார்ப்பதற்கு அழகாக தோற்றமளித்துள்ளார் பரினா. இந்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் பலரும் பரினாவுக்கு தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!