சிங்கப் பெண்ணாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரல் வீடியோ!

0
சிங்கப் பெண்ணாக மாறிய 'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா - வைரல் வீடியோ!
சிங்கப் பெண்ணாக மாறிய 'பாரதி கண்ணம்மா' நடிகை பரினா - வைரல் வீடியோ!
சிங்கப் பெண்ணாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரல் வீடியோ!

பாரதி கண்ணம்மா சீரியலில் அழகான வில்லியாக கலக்கி வரும் நடிகை பரினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்துடன் ‘சிங்கப் பெண்’ பாடலை இணைத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

இன்ஸ்டா வீடியோ:

இன்றைய காலத்து பெண்கள் வேலை, படிப்பு, குடும்பம் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து கையாளும் திறனை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். அது எந்தத்துறையில் இருக்கும் பெண்களுக்கும் பொருத்தமான ஒன்று தான். குறிப்பாக சினிமாத் துறைகளை எடுத்துக்கொண்டாலும் வேலை, குடும்பம் என அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு பெண்கள் வளர்ந்துள்ளனர். அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் பெண்கள் தங்களது கர்ப்ப காலங்களிலும் கூட படப்பிடிப்புகளில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

மதுரையில் இன்று ‘நிழலில்லா நாள்’ – கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!

பொதுவாக கர்ப்ப காலங்களில் சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில், சீரியல் நடிகைகள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக திகழ்கின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மீனவாக நடித்து வரும் ஹேமா, தனது கர்ப்பகாலத்தில் அதாவது குழந்தையை பிரசவிக்கும் 10 நாட்கள் வரை சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.

அந்த வகையில் மற்றொரு சீரியல் நடிகையான பாரதி கண்ணம்மா புகழ், வெண்பா என்ற பரினாவும் தனது கர்ப்பகாலத்தில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.பொதுவாக சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நட்புறவு வைத்திருக்கும் பரினா, தான் அவ்வப்போது எடுத்த புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஆனால் தற்போது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை எடுப்பதில் பிசியாக இருந்து வரும் பரினா, அவற்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தவறுவதில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் மெட்டர்னிட்டி போட்டோஷூட் வரிசையில் பரினா முதன் முதலாக எடுத்துக்கொண்ட கருப்பு நிற உடையில் தோன்றும் ஒரு வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, பிகில் படத்தில் தோன்றும் ‘சிங்கக் பெண்’ பாடலில் வரும் ஒரு சிங்கப் பெண்ணாக, பரினா பிதிபலிப்பது போல தோற்றமளிக்கிறது. அதாவது நடிகை பரினா, பிரசவம் என்ற மிகப்பெரிய வலியை தாங்கக் கூடிய சிங்கப் பெண்ணாக தன்னை உணர்வதாக வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!