மதுரையில் இன்று ‘நிழலில்லா நாள்’ – கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!

0
மதுரையில் இன்று 'நிழலில்லா நாள்' - கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!
மதுரையில் இன்று 'நிழலில்லா நாள்' - கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!
மதுரையில் இன்று ‘நிழலில்லா நாள்’ – கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் நிழல் இல்லா நாள் காணப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் இன்று நிழல் இல்லா நாளாக இருக்கும் என கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நிழல் இல்லா நாள்:

உலகில் அவ்வப்போது பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. உச்சி வெயில் பொழுதில் நிழல் விழுவது பொதுவான ஒன்று. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு சில நேரங்களில் மட்டும் நிழல் விழாத அதிசயம் நடைபெறும். இது நிழல் இல்லா நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் இன்று நண்பகல் 12:19 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறும் என கூறப்பட்டது. இந்த அறிய நிகழ்வானது வருடத்தில் 2 முறை நடைபெறும் என கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தொழில் உரிமம் ரத்து!

”இந்த அரிய நிகழ்வை அனைவரும் பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி, இந்நிகழ்வை புகைப்படம் எடுத்தும் பரிசுகள் வெல்லலாம். பகலில் வெயில் இருப்பினும், குறிப்பிட்ட நிமிடங்கள் நிழல் விழாது. நிழல் நமது பாதங்களுக்குள் போய்விடும். வாகனத்தில் செல்வோரின் நிழல் வண்டியின் கீழ் பகுதிக்குள் விழுந்திருக்கும்.

கொடிக்கம்பம், தனியே நடப்பட்டுள்ள கம்புகளின் நிழல் காணாமலே போயிருக்கும். இந்நேரத்தில் மதுரையில் உள்ளவர்கள் நிழல் இல்லா புகைப்படத்தை, ஒரு நிமிட வீடியோவை ‘98425 95536’ என்ற வாட்சப் எண்ணிற்கு அல்லது [email protected] om என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். பரிசுகளையும் வெல்லலாம்” என மதுரை கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் கூறியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்த நிழல் இல்லா நாள் குறித்த ஏராளமான தகவல்கள் பூஜ்ஜிய நிழல் நாள் – Zero Shadow Day (ZSD) என்ற மொபைல் அப்ளிகேஷனில் உள்ளது. இதனை பல்வேறு பகுதிகளில் மக்கள் முயற்சித்து பார்த்து வியந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிழல் இல்லாத புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!