‘பாரதி கண்ணம்மா’ ஹேமா, லட்சுமியுடன் இணைந்த அகிலன் – சீரியலின் அடுத்தகட்ட கதைக்களம்!
விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட காட்சிகள் ஹேமா மற்றும் லட்சுமி படித்து வரும் பள்ளிக்கூடத்தில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அதன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சுகேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
தமிழ் சின்னத்திரை தொடர்களில் பெருமளவு பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த கட்டங்களை நோக்கி நகர இருக்கிறது. இதற்கு முன்னதாக கண்ணம்மா தன்னுடைய 2வது குழந்தை குறித்த உண்மையை தெரிந்து கொண்டதும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில அதிரடியான காட்சிகள் அரங்கேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் வழக்கம் போல சௌந்தர்யா கண்ணம்மாவின் அதிரடிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த வெண்பாவாக அனிதா சம்பத் / விஜே மணிமேகலை? ரசிகர்கள் ஷாக்!
மறுபக்கத்தில் கண்ணம்மா, ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாரோ என பாரதிக்கு அச்சம் உருவாகியுள்ளது. இப்போது ஹேமாவை கண்ணம்மாவிடம் ஒப்படைக்கவும் முடியாமல் பாரதியிடம் இருந்து பிரிக்கவும் முடியாமல் சௌந்தர்யா தவித்து நிற்கிறார். இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் காட்சிகள் மந்தமாக நகர்ந்து வர மீண்டுமாக ஹேமா மற்றும் லட்சுமியின் பள்ளிக்கூட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் சரவண விக்ரமின் ஆரம்ப கால வாழ்க்கை – மனம் திறந்த அம்மா!
இது தொடர்பான படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில எபிசோடுகளாக ‘பாரதி கண்ணம்மாவில்’ தலை காட்டாத நடிகர் சுஹேஷ் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு தளத்தில் லிசா மற்றும் ரக்ஷாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். இருந்தாலும் வழக்கம் போல இந்த பள்ளிக்கூட காட்சிகளிலும் ஏதாவதொரு ட்விஸ்டு இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.