பாரதி உடன் நடிக்க பயப்படும் கண்ணம்மா ரோஷினி – சீரியல் இயக்குனர் கூறிய தகவல்! ரசிகர்கள் ஷாக்!

1
பாரதி உடன் நடிக்க பயப்படும் கண்ணம்மா ரோஷினி - சீரியல் இயக்குனர் கூறிய தகவல்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி உடன் நடிக்க பயப்படும் கண்ணம்மா ரோஷினி – சீரியல் இயக்குனர் கூறிய தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் பிரசாத் மற்றும் இயக்குனர் பிரவீன் இணைந்து பேசிய வீடியோ ஒன்று ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத் மற்றும் இயக்குனர் பிரவீன் இணைந்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர். அதில் பாரதி பல படங்களில் நடித்து இருக்கிறார். அதில் பார்த்து தான் இந்த சீரியலுக்கு நான் தேர்வு செய்தேன் என சொல்லி இருக்கிறார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர்கள் பெறும் சம்பளம் – ப்ரியங்கா முதல் மாகாபா வரை!

இவர் நடிப்பதை பார்த்து கண்ணம்மா பயப்படுவார் என இயக்குனர் தெரிவித்துள்ளார். கண்ணம்மாவிற்கு முதலில் இப்போது நடிக்கும் அளவிற்கு நடிக்க தெரியாது. இவர் பயங்கரமாக நடிப்பதை பார்த்து என்ன சார் இப்படி நடிக்கிறார் இவர் என கேட்பாராம். பின் அவரும் நன்றாக நடிக்க தொடங்கிய பின் இருவருக்கும் பொருத்தமாக இருந்ததாக சொல்கிறார். மேலும் கண்ணம்மாவிற்கும் பாரதிக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள். மேலும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் என்பதால் அவர் எனக்கு நல்ல தோழி என அருண் சொல்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

அவர் நடிப்பு திறமையால் பல செட் பொருள்களை அவர் உடைத்திருப்பதாகவும் கோபமான காட்சிகளில் நடிக்கும் போது அனைவரும் தள்ளி நிற்பார்கள் என நகைச்சுவையுடன் அருண் சொல்கிறார். பின் வெண்பா பற்றி பேசிய அவர், அதிகமான சாபங்களை பெறுகிற நபர், தற்போது கர்ப்பமாக இருப்பதால் பல நெகட்டிவ் கமெண்ட் வருகிறது. அதை பொறுத்துக் கொண்டு அவர் நடித்து வருகிறார். சொல்லப்போனால் வெண்பாவிற்கு எதிர்மறையாக தான் பரீனா இருப்பார் என இயக்குனர் பிரவீன் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!