விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் தற்போது அவுட்டிங் சென்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

மக்களின் பேராதரவுடன் தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி 4 எபிசோடுகளாக வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 10 போட்டியாளர்களுடன், 10 கோமாளிகள் இணைய வழக்கமான கலாட்டாக்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இம்முறை ரோஷினி ஹரிப்ரியன், அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், வித்யூலேகா, ஸ்ருத்திகா, அந்தோணி தாஸ், மனோபாலா, ராகுல் தாத்தா, சந்தோஷ், தர்ஷன் உள்ளிட்ட 10 பேர் குக் ஆக கலந்து கொண்டுள்ளனர். அதே போல கோமாளிகள் பட்டியலில் பரத், முருகன், சீதல், அருண் ஆகியோர் இணைந்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய ‘பிக் பாஸ்’ வனிதா மூத்த மகளின் துணிச்சல் – வியப்பில் ரசிகர்கள்!

இப்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் போட்டி கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் முதல் முறையாக புகழ் கோமாளியாக கலந்து கொண்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு காரணமாக ஷிவாங்கி இந்த ஷோவில் கோமாளியாக கலந்து கொள்ளவில்லை. என்றாலும் ‘குக் வித் கோமாளி’ ஷோ புகழின் வருகையால் வழக்கம் போல களைகட்ட, பல ஸ்வாரசியமான சம்பவங்களும் நடைபெற்றது. அந்த வகையில் ராகுல் தாத்தாவிடம் மாட்டிக்கொண்டு மணிமேகலை கதற, புஷ்பாவாக நடித்த பாலா மக்களிடம் இருந்து ஏகப்பட்ட கிளாப்ஸ்களை அள்ளி இருந்தார்.

இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!

இந்த முதல் போட்டியில் கிரேஸ் கருணாஸ் இம்யூனிட்டி பேண்ட் பெற்றுள்ளார். இப்போது ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் போட்டியாளர்கள் சந்தோஷ், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷினி, ஸ்ருத்திகா, வித்யூலேகா, ஷிவாங்கி, பரத், சக்தி, செஃப் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் இணைந்து அவுட்டிங் சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் கோமாளி பரத்தை அம்மு, ஸ்ருத்திகா ஆகியோர் செல்லமாக தாக்குவது போல வெளியான வீடியோ ஒன்று மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here