வங்கிகளில் வேலை நேரம் குறைப்பு – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
வங்கிகளில் வேலை நேரம் குறைப்பு - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வங்கிகளில் வேலை நேரம் குறைப்பு - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வங்கிகளில் வேலை நேரம் குறைப்பு – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக வங்கிகளில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என வங்கிகள் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வேலை நேரம் குறைப்பு:

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக செய்து வருகிறது. ஆனாலும் தொற்று பரவல் குறையாமல் மென்மேலும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் அரசு ஊரடங்கை அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இராண்டாம் பரவல் அதிகமாவதால் கடுமையான கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமலில் உள்ளது. மக்கள் வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வங்கிகளில் நேரத்தைக் குறைப்பது பற்றியும் மாநில அளவிலான வங்கிகள் குழுவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது .மே 31ஆம் தேதி வரை இந்த வேலை நேரம் அமலில் இருக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் செயல்பாடு – ராமதாஸ் குற்றச்சாட்டு!!

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் வங்கிகள் 3 மணி நேரம் மட்டுமே செயல்படும். சூழ்நிலையை பொறுத்து மாற்று நடவடிக்கைகள் செய்யப்படும். மக்கள் வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யவும், பணத்தை எடுக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா தொடரிலிருந்து வங்கி ஊழியர்களை காக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்