‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் புதிய ட்விஸ்ட் - கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!
'பாக்கியலட்சுமி' சீரியலில் புதிய ட்விஸ்ட் - கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – கையும் களவுமாக சிக்கிய கோபி! வெளியான ப்ரோமோ!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ஆரம்ப எபிசோடுகள் முதல் எதிர்பார்க்கப்பட்டு வரும் கோபியின் திருவிளையாடல் காட்சிகளை தொடர்ந்து, அவரது அப்பாவிடம் கோபி வசமாக மாட்டிக்கொண்டவாறு புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

பல்வேறு ட்விஸ்ட் அல்லது திருப்பங்களுடன் வெளியாகும் சீரியல்கள் தான் எப்போதும் கவனம் ஈர்த்து வருகிறது. பொதுவாக ஒரு சில சீரியல்களில் அடுத்து இது தான் நடக்கப் போகிறது என்பதை கணித்து விடும் ரசிகர்கள் அது எப்போது நடக்கும் என்பதை எதிர்பார்த்து காத்து கிடப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, பாக்கியலட்சுமி உட்பட குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் ஏமாற்றி வருவது அந்த குடும்பத்துக்கு எப்போது தெரியவரும் என ஒவ்வொரு கட்டத்திலும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?

ரசிகர்களின் இந்த நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் அடுத்த வார கதைக்களத்துக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதில் மயூ மற்றும் ராதிகாவுடன் கோவிலுக்கு செல்லும் கோபி, சாமி தரிசனம் செய்த பிறகு ராதிகாவுக்கு குங்குமம் வைத்து விடுகிறார். பிறகு மயூ, கோபியை கட்டியணைத்து கொள்ள அவருக்கு முத்தமிடுகிறார் கோபி. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கோவிலுக்கு வரும் கோபியின் அப்பா, இந்த காட்சியை பார்த்து விக்கித்து நிற்கிறார்.

பிக் பாஸ் சீசன் 5: ப்ரியங்காவிற்கு செம டோஸ் விடும் உலக நாயகன் – இன்றைய ப்ரோமோ!

ஏற்கனவே கோபியின் நடவடிக்கை சரி இல்லை என எண்ணிக்கொண்டிருக்கும் அவரது அப்பா இந்த காட்சியை பார்த்ததும் நேரடியாக கோபியிடம் சென்று சண்டை போடுவாரா அல்லது இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போத கோபியின் எல்லா நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டும் விதமாக வெளியான ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் ப்ரோமோ காட்சிகள் அடுத்த வார கதைக்களத்தில் வெளியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!