அமிர்தா குடும்பத்திற்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில், வெடி வெடிக்க கோபியை எதிர்பார்க்கும் மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
அமிர்தா குடும்பத்திற்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில், வெடி வெடிக்க கோபியை எதிர்பார்க்கும் மயூரா - இன்றைய
அமிர்தா குடும்பத்திற்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில், வெடி வெடிக்க கோபியை எதிர்பார்க்கும் மயூரா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
அமிர்தா குடும்பத்திற்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில், வெடி வெடிக்க கோபியை எதிர்பார்க்கும் மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் வீட்டில் அனைவருக்கும் தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார். பின் அமிர்தா குடும்பத்திற்கும் ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் வீட்டில் அனைவருக்கும் ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார். அப்போது செல்வி குடும்பத்திற்கும் எழில் ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார். அப்போது ஈஸ்வரி வீட்டில் வேலை செய்பவருக்கு எதற்கு ட்ரெஸ் என கேட்க, அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். அவரிடம் ஈஸ்வரி எழில் எல்லாருக்கும் ட்ரெஸ் வாங்கி கொடுத்திருக்கான் என சொல்ல, கோபிக்கும் எழில் ட்ரெஸ் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை பார்த்து கோபி ரொம்ப சந்தோசப்படுகிறார். என்னுடைய சைஸ் எப்படி தெரியும் என கேட்க, எனக்கு தெரியும் அப்பா என சொல்கிறார். எழில் நன்றாக வளர்ந்துவிட்டாய் என நினைத்து கோபி சந்தோசப்படுகிறார்.

கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் எழில் தனது நண்பன் சதிஸ்க்கும் ட்ரெஸ் வாங்கி கொடுக்கிறார். அப்போது இது யாருக்கு என கேட்க, அமிர்தா குடும்பத்திற்கு என சொல்கிறார். அமிர்தாவிற்கு சேலை வாங்கி வைத்திருக்கேன் என சொல்ல, அதெல்லாம் சரியாக இல்லை என சதீஸ் சொல்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வர அவர் பாபாவுடன் கொஞ்சி கொண்டிருக்கிறார். எழில் அனைவருக்கும் ட்ரெஸ் வாங்கி கொடுக்க, கணேஷ் இல்லாமல் நாங்க தீபாவளி கொண்டாடவில்லை என சொல்கிறார்கள் நிலா பாபாவிற்காக நீங்க கொண்டாட வேண்டும் என சொல்கிறார்.இந்த ட்ரெஸ் போட்டு நாளை என் வீட்டிற்கு வர வேண்டும் என எழில் சொல்லி அமிர்தாவுக்கு வாங்கிய புடவையை கொடுக்கிறார்.

எழில் பாபாவிற்கு ட்ரெஸ் வாங்கி கொடுக்க அதை பார்த்து அமிர்தா சந்தோசமாக இருக்கிறார். மறுநாள் தீபாவளிக்கு தயாராக சொல்ல, எழில் வெடி வெடித்து அமிர்தா குடும்பத்தை சந்தோசமாக இருக்கிறார். நாளைக்கு வந்து நான் கூட்டிட்டு போறேன் என சொல்லி எழில் கிளம்புகிறார். இனியாவும் வெடி வெடிக்க தாத்தா கூட வருகிறார். ஜெனி செல்வி என அனைவரும் சேர்ந்து வெடி வெடிக்க கிளம்புகின்றனர். குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் வெடி வெடிக்க எழில் அப்போது வருகிறார். மறுநாள் தீபாவளி என்பதால் செல்விக்கு ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகளை பாக்கியா கொடுக்கிறார்.

வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மயூரா எல்லாரும் பட்டாசு வெடிக்கிறாங்க நாம வெடிக்க வேண்டாமா என கேட்கிறார். ராதிகா இப்போது கம்பி மத்தாப்பு வெடிப்போமா என கேட்க, ராதிகா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார், மயூரா இப்போது கோபி அங்கிள் வரேன் என சொன்னாரு அவரு நிறைய பட்டாசு வாங்கி வருவதாக சொல்ல, ராதிகா அவர் வரும் போது வரட்டும் என சொல்கிறார். இல்லை அங்கிள் வந்தால் தான் நான் பட்டாசு வெடிப்பேன் என மயூரா பிடிவாதமாக இருக்கிறாள் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here