கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் - இன்றைய
கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணன் செய்த காரியத்தால் கோவத்தில் திட்டும் மூர்த்தி, ஆதரவாக பேசும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வீட்டிற்குள் வந்து கடை சாவியை எடுத்ததை தெரிந்து மூர்த்தி கோபப்படுகிறார். கண்ணனை பேச விடாமல் மூர்த்தி பேச கண்ணனை அடிக்க வருகிறார். அப்போது தனம் மூர்த்தியை தடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், சென்னைக்கு மூர்த்தி குடும்பத்தினர் சென்ற போது கண்ணன் கடையை திறந்தது தெரியவருகிறது. அதை கேட்டு மூர்த்தி கோவப்பட, வீட்டிற்கு வர சொல்லி பேசுகிறார். கண்ணனிடம் கடையை திறந்தியா என கேட்க அது வந்து என சொல்ல வருகிறார். ஆனால் கண்ணனை பேச விடாமல் மூர்த்தி பேச, கடையை திறந்தியா என கேட்கிறார். ஆமாம் என கண்ணன் சொல்ல, மூர்த்தி அடிக்க கை ஓங்குகிறார். தனம் மூர்த்தி கையை பிடிக்க, நீ கொடுக்கிற இடம் உன்னால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என சொல்கிறார்.

அப்போது கண்ணன் நீங்க கடையை திறக்காமல் இருந்ததால் மகாலட்சுமி கடைக்காரர் ஆஃபர் கொடுத்தான் அதனால் நம்ம வாடிக்கையாளர் அனைவரும் அவங்க கடைக்கு போனார்கள். அதனால் தான் கடையை திறந்தேன் என சொல்ல, இது சாதாரணமாக சேர்த்த வாடிக்கையாளர்கள் இல்லை. காலம் காலமாக நம்மிடம் தான் பொருள் வாங்குறாங்க, அதெல்லாம் யோசிக்காமலா நாங்க சென்றிருப்போம் என கேட்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது என கண்ணன் சொல்ல, தனத்தை இவனை கண்ணு முன்னால் நிற்க வேண்டாம் என சொல்ல சொல்கிறார்.

வெண்பாவின் முகத்திரையை கிழித்த அஞ்சலி, கண்ணம்மா உடன் வாழ முடிவு செய்யும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

பின் கண்ணன் வெளியே வர என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் என கதிர் சொல்கிறார். ஐஸ்வர்யா சரி கவலைப்படாதே என சொல்கிறார். தனம் நடந்ததை நினைத்து வருத்தப்பட மூர்த்தி கடைக்கு கிளம்பலாம் வா என கேட்கிறார். பின் தனம் அவன் செய்ததில் என்ன தப்பு என கேட்கிறார். அவன் நாம் இல்லாத போது கடையை திறந்தால் அவன் செய்யும் தப்புக்கு நாம் பொறுப்பாக முடியும் என கேட்கிறார். தனம் நீங்க எல்லாரும் என்ன தப்பு பண்ணாமல் தான் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கீங்களா என கேட்கிறார். கதிரிடம் என்ன இவள் இப்படி பேசுகிறாள் உனக்கு இவள் பேசுவது சரியாக இருக்கிறதா என கேட்கிறார்.

அவன் செய்தது பெரிய தப்பு தான் அதற்காக இப்படி திட்டி இருக்க வேண்டாம் என கதிர் சொல்கிறார். பின் அவன் வீடு ஏறி குதித்து சாவி எடுக்கலாமா என கேட்க, இது அவனுடைய வீடு என்ற உரிமையில் எடுத்திருக்கான். அந்த கடையில் அவனுக்கும் உரிமை இருக்கிறது என தனம் சொல்கிறார். பின் கதிர் மூர்த்தி கடையை திறக்க செல்கின்றனர். மீனா ஜீவா வீட்டிற்கு வர, நடந்ததை எல்லாம் முல்லை சொல்கிறார். நான் எல்லாத்தையும் பார்த்தேன் ஆனால் நீங்க சென்னைக்கு போன இடத்தில் சொல்ல வேண்டாம் என நினைத்தேன் என சொல்கிறார்.

திருச்சியில் நாளை (நவ.26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

கடையில் எதாவது பிரச்சனையா என ஜீவா கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை கடைக்கு பிரச்சனை இல்லாமல் தான் இருக்கிறது என கேட்கிறார். அப்போது மீனாவின் அப்பா கண்ணன் சூப்பர் மார்க்கெட்டில் செய்தது பற்றி சொல்ல வருகிறார். அப்போது கதிர் மீனா அப்பாவை பேசவிடாமல் செய்கிறார். அதோடு மீனா அப்பா பேசாமல் இருக்கிறார். பின் முல்லை கண்ணன் பற்றி சொல்லிருக்கலாம் அல்லவா என கதிரிடம் சொல்ல, கதிர் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். ஏற்கனவே அவன் தப்பு பண்ணிருக்கான் இனிமேல் அவன் எதுவும் செய்ய வேண்டாம் என கதிர் சொல்கிறார்.

பின் முல்லை மீனா பேசிக் கொண்டிருக்கின்றனர். மீனா கண்ணன் ஏன் இப்படி செய்ய வேண்டும் அதுவும் ஓட்டை பிரித்து என கேட்கிறார். அக்காவிற்கு கடையில் கண்ணனிற்கு உரிமை இல்லையா என நினைக்கிறார். மற்றவர்கள் யாரவது அப்படி செய்திருந்தால் சும்மா தான் இருப்பார்கள் என சொல்ல, கண்ணன் முன் போல் இல்லை என மீனா நினைக்கிறார். அப்பாவின் சூப்பர் மார்க்கெட் ஏன் போகவில்லை என தெரியவில்லை அவரு சொல்ல வந்தாரு ஆனால் கதிர் செல்லவிடாமல் செய்துவிட்டார் என சொல்கிறார். என் அப்பாவிடம் என்ன பிரச்சனை என கேட்போம் என மீனா சொல்ல முல்லை அதெல்லாம் முக்கியம் இல்லை என முல்லை தடுக்கிறார். பின் மீனா போன் செய்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!