AUS vs NED 2023 WC Updates: மேக்ஸ்வெல் மிரட்டல் பேட்டிங்.. ஆஸ்திரேலியா 399 ரன்கள்!!
இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 உலக கோப்பை தொடரின் 24வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் அரங்கேறி வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மைதானத்தின் அகலங்கள் குறைக்கப்பட்டதால் அதிரடி ஆட்டம் வெளிப்பட்டது. அதாவது துவக்க வீரர் வார்னர் (104) சதமடித்து அசத்தினார்.
அவரை தொடர்ந்து ஸ்மித் 71 ரன்களும், லபுசாக்னே 62 ரன்களும் குவித்து அசத்தினர். இறுதி கட்டத்தில் வந்த மேக்ஸ்வெல் வாணவேடிக்கை காட்ட ஸ்கோர் வேகமாக முன்னேறியது. தொடர்ந்து அவர் 44 பந்தில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஸ்கோர் மந்தமானாலும் அவ்வணி 50 ஓவர்களில் 399/8 ரன்கள் குவித்தது.
நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக்கன் 4 விக்கெட் சாய்த்தார். அதனை தொடர்ந்து 400 ரன்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களமிறங்கி உள்ளது. ஆனால் துவக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறுவதால் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் பிளேயிங் 11:
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர் ), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா
நெதர்லாந்து : விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன் /விக்கெட் கீப்பர் ), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்