தமிழக 11, 12,ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக 11, 12,ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
தமிழக 11, 12,ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!
தமிழக 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மே மாதம் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022 ம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் தேர்வின் முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா குறைவுக்கு பிறகு கடந்த 2021 – 2022 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி கடந்த மே மாதம் 5ம் தேதி 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வானது மே 31ம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு முதல் கட்டமாக கடந்த ஜூன் 20ம் தேதி காலை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், மதியம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் 51 அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு பட்டியல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதே போல துணை தேர்வு எழுதியவர்களுக்கும் கடந்த மாதம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகள் வாயிலாக பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாக அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!