PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!

0
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வருமானம்!

தங்களது எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க விரும்பும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்குதாரர்களுக்கு ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி வரை பெறும் ஒரு சூப்பர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சலுகை அறிவிப்பு

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக வெவ்வேறு இடங்களில் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்கிறோம். இந்த முதலீடுகளில் பல லாபம், நஷ்டம் இருக்கலாம். ஆனால் நீங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தால் இந்த சேமிப்பு பல நன்மைகளை பயக்குகிறது. அந்த வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை EPF இல் முதலீடு செய்து, அவர்கள் ஓய்வு பெறும்போது பெரிய தொகையைப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.

தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

நிபுணர்களின் கூற்றுப்படி, ஊழியர் ஒருவரின் அடிப்படை ஊதியம் ரூ. 20,000 ஆகவும், 25 வயதிலிருந்து EPF 24% (12% பணியாளர் + 12% முதலாளி) கழிக்கப்பட்டால், ஒவ்வொரு மாதமும் ரூ.4800 முதலீடு செய்ய வேண்டும். இப்படி 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால் ஒரு ஊழியர் ஓய்வு பெறும் போது சுமார் ரூ.2 கோடிக்கு மேல் பெறலாம். சுருங்க கூறின், நீங்கள் EPF இல் முதலீடு செய்யும் போது, 8.5% வட்டி விகிதம் கிடைக்கும். இதில் 7% சம்பள உயர்வு என்று நாம் கருதினால், 25 வயதில் முதலீடு செய்தால் ஓய்வு காலத்தில் அந்த பணம் உங்களை பில்லியனராக்கும்.

இதன் மூலம் எவ்வளவு நன்மை வழங்கப்படும். இந்த சேமிப்பை எப்போது தொடங்கலாம் என்பதை பார்ப்போம். முதலாவதாக நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்து குறைந்தபட்ச சம்பளம் ரூ.20,000 பெற்றால், நீங்கள் ஓய்வுபெறும் போது உங்களிடம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும்.

  • அதுவே 30 வயதில், அடிப்படை சம்பளம் ரூ.28,051 எனில் ஓய்வு பெறும்போது ரூ.2.30 கோடி கிடைக்கும்.
  • 35 வயதில் ஊதியம் ரூ.39,343 எனில் ஓய்வு பெறும்போது, ரூ.1.85 கோடி பெறுவீர்கள்.

  • 40 வயதில் ரூ.55,181 அடிப்படை சம்பளத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால் ரூ.1.42 கோடி லாபம் கிடைக்கும்.
  • 45 வயதில் அடிப்படை ஊதியம் ரூ. 77,394 என்றால் நீங்கள் ரூ.1.03 கோடி பெறுவீர்கள்.
  • 50 வயதில் அடிப்படை ஊதியம் ரூ. 1,08,549 எனில் ஓய்வுபெறும் போது ரூ.66.44 லட்சம் பெறுவீர்கள்.

இப்போது EPFO வாடிக்கையாளர்கள், மிகவும் அவசியமான வேலைக்காகவோ அல்லது அவசர தேவைக்காகவோ இல்லாமல் EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது உங்கள் ஓய்வூதிய சேமிப்பைக் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, 30 வயதில் உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்தை நீக்கினால், 60 வயதில் உங்கள் ஓய்வூதிய சேமிப்பு ரூ.11.55 லட்சம் குறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், நீங்கள் வேலை மாறும்போது உங்கள் பழைய கணக்குப் பரிமாற்றத்தை மட்டுமே பெற வேண்டும். கணக்கு மாற்றப்படாவிட்டால், புதிய கணக்கில் வட்டி சேரும். ஆனால் பழைய கணக்கின் வட்டி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!