அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

“Centre for Global Equality Limited (CGE) – Collaboration Project” என்ற திட்டத்தின் கீழ், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் – 600 025 என்ற முகவரியில் உள்ள பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் (CCCDM)க்கான திட்ட விஞ்ஞானி மற்றும் திட்ட உதவியாளர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Scientist & Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

அண்ணா பல்கலைக்கழக  காலிப்பணியிடங்கள்:

Project Scientist & Assistant ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து  B.Com./BBA/ h.D. in Climate Change/Environmental Science, with Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு 100% கல்வி கட்டண தள்ளுபடி – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

சம்பள விவரம்:

Project Scientist  – ரூ.60,000/-

Project  Assistant – ரூ.24,000/-

அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பயோடேட்டா, மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டச் சான்றிதழின் நகல், அனுபவச் சான்றிதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளின் நகல் மற்றும் தென்னிந்திய காலநிலை இணக்கத்தன்மையின் தேவை மற்றும் நோக்கத்தைக் குறிப்பிடும் கருத்துக் குறிப்புடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முழுமையான விண்ணப்பம் 15.02.2024 அன்று அல்லது அதற்கு முன் தபால் மூலம் “The Director, Centre for Climate Change and Disaster Management, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 025” என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!