ஞாயிற்றுக்கிழமை செமஸ்டர் தேர்வு.. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட கால அட்டவணை – அதிருப்தியில் மாணவர்கள்!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செமஸ்டர் தேர்வு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் MBA, MCA, MSC ஆகிய பட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதில் நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு வரும் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் பாட வாரியான கால அட்டவணையும் வெளியாகி உள்ளது. அதில் பிப்ரவரி 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தரவுதள மேலாண்மை அமைப்பு, மின் வணிகம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்வி – தேர்தல் ஆணையம் விளக்கம்!!
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மற்றும் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் மட்டுமே விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.