அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு – மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

0
அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு - மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு - மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
அமேசான், ஃபிளிப்கார்டில் வேலைவாய்ப்பு – மோசடி கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!

அமேசான், ஃபிளிப்கார்டில் வேலை இருப்பதாக கூறி நூதன பண மோசடிகள் நடைபெற்று உள்ளது. இதனை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வேலைவாய்ப்பு மோசடி:

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிகம் ஆன்லைன் ஷாப்பிங்கை நாடுகின்றனர். அதனை பயன்படுத்தி தற்போது பல்வேறு மோசடி வேலைகள் நடந்து வருகிறது. இண்டர்நெட்டை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அமேசான், ஃபிளிப்கார்டில் வேலை இருப்பதாக கூறி நூதன பண மோசடி ஒன்று நடந்துள்ளது. மேலும் ஷாப்பி, லசாடா, போன்ற முன்னணி ஆன்லைன் சேவை வழங்கும் நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ஏமாற்று வேலையே தொடங்கியுள்ளது மோசடி கும்பல்.

BEL நிறுவனத்தில் ரூ.11,110/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வருகிறது. அதை கிளிக் செய்வதன் மூலம் Honey மற்றும் Making எனும் செயலி டவுன்லோட் ஆகிறது. அதனை தொடர்ந்து மோசடி நபர்கள் WhatsApp மற்றும் Telegram மூலம் பணம் சம்பாதிப்பது குறித்து அறிவுரையும் வழிமுறையும் கற்றுக் கொடுக்கின்றனர். அதன் பின் போனஸ் தொகையாக ரூ.101 அனுப்பி குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் கமிஷன் கிடைக்கும் என நம்ப வைக்கிறார்கள்.

இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 33,376 பேருக்கு தொற்று! 308 பேர் உயிரிழப்பு!

அதனை தொடர்ந்து பலர் பொருட்களை வாங்கி விற்று வருகின்றனர். ஆனால் கமிஷன் தொகை வங்கியில் ஏறாமல் செயலியில் மட்டுமே இருந்து வருகிறது. பின்னர் பணம் முழுவதையும் மோசடி செய்து வருகின்றனர் இந்த கும்பல். இதில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்களிடம் இந்த செயலியை உடனடியாக டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!