Airtel பயனர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு.. 2023 முதல் அமல்!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு.. 2023 முதல் அமல்!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு.. 2023 முதல் அமல்!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணம் அதிரடி உயர்வு.. 2023 முதல் அமல்!

பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான பரிசீலனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

ரீசார்ஜ் கட்டணம்:

நாட்டின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் தற்போது ஆரம்ப ரீசார்ஜ் கட்டணமாக ரூ. 99க்கு ப்ரீபெய்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இதன் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் ஹரியானா மற்றும் ஒடிசாவில் கடந்த நவம்பர் மாதம் முன்னோட்டமாக குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து ரூ.155 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவு.. இறுதி மரியாதை செய்த மோடி – உலக தலைவர்கள் இரங்கல்!!

இந்த புதிய ரீசார்ஜ் கட்டணத்திற்கு பயனர்கள் அளிக்கும் வரவேற்பு மற்றும் கருத்துகளை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் புதிய ரீசார்ஜ் கட்டண உயர்வை அமல்படுத்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது 2023 பிப்ரவரி முதல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது குறித்த பரிசீலனை நடந்து வருகிறது.

Special Offer on SBI Exam Test Pack

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 79 ரூபாயில் இருந்து ரூ.99 ஆக உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் 2023 ம் ஆண்டில் ரீசார்ஜ் கட்டணம் ரூ. 155 ஆக உயரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!