8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி – ஆப்கானிஸ்தான் அதிரடி!!
நேற்று நடைபெற்ற லீக் தொடரில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.
உலகக்கோப்பை:
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டனர். இதுவரை நடைபெற்ற லீக் தொடர்களில் பாகிஸ்தான் அணியினர் இரண்டு வெற்றிகளையும், ஆப்கானிஸ்தான் அணியினர் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில் கட்டாயமாக பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை வெல்லும் என பல தரப்பில் கூறப்பட்டது., போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
Follow our Twitter Page for More Latest News Updates
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர் 50 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பில் 282 ரன்களை குவித்தனர். இதன் பின்னர், களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியினருக்கு வெற்றி இலக்காக 283 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை ஆப்கானிஸ்தான் அணி 49வது ஓவரிில் 2 விக்கெட் இழப்பில் எட்டி பிடித்து பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.