LKG, UKG படித்தால் தான் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் மாணவர்கள் எல்கேஜி, யுகேஜி (LKG, UKG) வகுப்புகள் படித்தால் தான் 1ம் வகுப்பு சேர்க்கப்படும் என்று தனியார் பள்ளிகள் கூறினால் அந்த பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் காரணத்தால் புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மேலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி குழந்தைகளை சேர்ப்பது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியமாக உள்ளது.
BSNL, Jio Fiber & Airtel Extreme இன்டர்நெட் சேவை திட்டங்கள் – முழு விவரம்!
அதனால் இந்தாண்டு தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. இந்த மாணவர் சேர்க்கையை தக்கவைத்து கொள்வதற்காக அரசு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்திலும் பயில்வதற்கு ஏற்றவாறு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தி இடைவிடாது மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2,4379 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் படித்தால் தான் 1ம் வகுப்பு சேர்க்கப்படும் என்று தனியார் பள்ளிகள் கூறுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவ்வாறு கூறும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் எச்சரித்து உள்ளார்.