வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் சன் டிவி அண்ணியார் மகள் – ரசிகர்கள் வாழ்த்து!

0
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் சன் டிவி அண்ணியார் மகள் - ரசிகர்கள் வாழ்த்து!
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் சன் டிவி அண்ணியார் மகள் - ரசிகர்கள் வாழ்த்து!
வெள்ளித்திரையில் தடம் பதிக்கும் சன் டிவி அண்ணியார் மகள் – ரசிகர்கள் வாழ்த்து!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரேகா கிருஷ்ணப்பாவின் மகள் வெள்ளித்திரையில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை மகள்

சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இந்த சீரியலில் நடிகை வாணி போஜன், நடிகர் கிருஷ்ணா ஆகியோருடன் நடிகை ரேகா கிருஷ்ணப்பா காயத்ரி என்கிற முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். இந்த சீரியலில் இவர் செய்து வந்த வில்லத்தனம் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதை தொடர்ந்து நடிகை ரேகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீலி’ என்ற திகில் சீரியல் ஒன்றிலும், ருக்மணி மாயமோகினி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனுடன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வில்லியாகவும் நடித்து வருகிறார் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரேகா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

செழியன் கையை உதறிவிட்டு, கரு கலைந்த சோகத்தில் அம்மா வீட்டிற்கு செல்லும் ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அந்த வகையில் தற்போது நடிகை ரேகா தனது மகள் வெள்ளித்திரையில் நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்ததும் அண்ணியாருடன் சேர்த்து அவரது மகளுக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!