சென்னை போட் கிளப் சாலைக்கு தனது வீட்டை மாற்றிய நடிகர் கமல்ஹாசன் – வெளியான தகவல்!

0
சென்னை போட் கிளப் சாலைக்கு தனது வீட்டை மாற்றிய நடிகர் கமல்ஹாசன் - வெளியான தகவல்!
சென்னை போட் கிளப் சாலைக்கு தனது வீட்டை மாற்றிய நடிகர் கமல்ஹாசன் - வெளியான தகவல்!
சென்னை போட் கிளப் சாலைக்கு தனது வீட்டை மாற்றிய நடிகர் கமல்ஹாசன் – வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் உலக நாயனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது சென்னையில் உள்ள போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது வீட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் பல பிரபலங்களின் இல்லங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்:

இந்திய திரைப்படத் துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றுள்ளார்.

IND vs ENG 3வது டெஸ்ட் Live Updates – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் பிறந்தவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணனும் நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ஷூட்டிங்காக அவர் சென்னை வந்துள்ளார். சில ஆண்டுகளாக சாந்தோம் அருகில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார் கமல்.

TN Job “FB  Group” Join Now

அங்கு அவருக்கு என தனி சமையல் கலைஞர் மற்றும் ஜிம் ஆகியவை இருந்தது நாம் அறிந்ததே. இதனிடையே கடந்த மாதம் கமல் சென்னையில் உள்ள முக்கிய பகுதியான போட் கிளப் ரோடு பகுதிக்கு தனது வீட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் பிரபல தொழில் அதிபர்களும் கலாநிதி மாறன், டிவிஎஸ் மோட்டார்ஸ் ஸ்ரீனிவாசன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட பலரது இல்லங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!