தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்.1 முதல் அரசு AC பேருந்துகள் இயங்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து, தற்போது வழக்கம் போல இயங்கி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 702 அரசு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஏ.சி பேருந்துகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் குறைவதால் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு வாகனங்களில் ஏ.சி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு ஏ.சி.பஸ்கள் மற்றும் ஏசி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் மே, ஜூன் மாதங்களில் அதிகரித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஜூன் இறுதியில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் – முதன்மைச் செயலர் உத்தரவு!

அதன் காரணமாக பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏ.சி வசதி இல்லாத அனைத்து பேருந்துகளும் இயங்க படிப்படியாக அனுமதி அளிக்கப்பட்டது. குளிர்சாதன வசதி உள்ள பஸ்களை இயக்க அனுமதி இல்லாததால், அரசு பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தொற்று கட்டுக்குள் இருப்பதால், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை இயக்க தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

PF கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதன் படி, அக்டோபர் 1ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு சார்பில் 702 ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!