விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் பல வாரங்களாக தொடர்ச்சியாக நாமினேட் செய்யப்பட்டு வந்த போட்டியாளர் அபிநய் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் எவிக்ஷன்

ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போட்டிகளுடன் களம் கண்டு வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆட்டம், பாட்டமாக களை கட்டி வந்த இந்த சீசன் தற்போது 76 எபிசோடுகளை கடந்து பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

சன் டிவி “வானத்தை போலே” சீரியலில் துளசியாக களமிறங்கிய புதிய நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!

இதுவரை ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு போட்டியாளர் வெளியற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து இந்த வார நாமினேஷன் ப்ராசஸ், பல்வேறு போட்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களை எவிக்ஷன் ப்ராசஸில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிகளில் சஞ்சீவ், சிபி, நிரூப், தாமரை செல்வி ஆகியோர் வெற்றி பெற்று இந்த வாரம் சேவ் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர ப்ரியங்கா, பாவனி, அபிநய், ராஜு, அமீர், அக்ஷரா, வருண் ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸில் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையில் இவர்களுக்கான வோட்டிங் ப்ராசஸ் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இப்போது வரை நடைபெற்ற வோட்டிங்கில் குறைந்தபட்ச வாக்குகளை பெற்று இந்த வாரம் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து போட்டியாளர் அபிநய் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வீட்டில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

ஏற்கனவே பாவனி மற்றும் அபிநய்க்கு இடையே நடைபெற்ற சில பிரச்சனைகள் பெரிதாக பேசப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை அபிநய் வோட்டிங்கில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த சீஸனின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் நாமினேட் செய்யப்பட்டு, கடைசியில் காப்பாற்றப்பட்டு வரும் போட்டியாளர் அபிநய் இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!