நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் “பிஏ.4.6” – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்
நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் "பிஏ.4.6" - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
நாட்டில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் “பிஏ.4.6” – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பிஏ.4.6 வைரஸ்

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு தற்போது தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து முன்பை விட வீரியம் மிக்கதாக பரவும் தன்மை கொண்டதாக மாற்றமடைகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் டெல்டா, ஓமைக்ரான் உள்ளிட்ட வகைகளில் உருமாற்றம் அடைந்து உலகையே அச்சுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ.4.6 துணை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வைரஸ் படிப்படியாக மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பிஏ.4.6 வைரஸ் தொற்று பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸில் உள்ள மேற்பரப்பில் புரதத்திற்கு ஒரு பிறழ்வைக் கொண்டு செல்கிறது.

தமிழக 11& 12 ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்தில் இதுவரை பரிசோதனை மேற்கொண்டதில் மொத்த பாதிப்பில் 9% நபருக்கு பிஏ.4.6 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. பிஏ.4.6 ஓமைக்ரான் வைரஸானது பிஏ.4 மறுபாட்டின் வழித்தோன்றலாகவும் பிஏ.4 வைரஸை ஒத்து இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இது எவ்வாறு உருவாகியுள்ளது என உறுதியாக கூற முடியவில்லை எனவும் கூறியுள்ளது. அத்துடன் இந்த வைரஸின் மேற்பரப்பில் உள்ள புரதத்திற்கு ஒரு பிறழ்வைக் கொண்டு செல்வதால் மனித உடலின் செல்லில் நுழைகிறது. மேலும் இது ஆன்டிபாடிகளில் இருந்து தப்பிக்க உதவுவதாகவும் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!