அரசு வேலை இனி இல்லை – தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!!!!!

1
அரசு வேலை இனி இல்லை- தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!!!!!
அரசு வேலை இனி இல்லை- தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!!!!!
அரசு வேலை இனி இல்லை – தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகளுக்கான நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மின்வாரியம் தனியார்மயமாக்குதல் :

கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்து தவிக்கின்றனர். இன்னும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் பலரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. சிலர் அரசு வேலை வாங்க வேண்டும் என பெரும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள சிராமப்பு பணிகளை செய்ய தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக மின்வாரியத்தில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களின் பணியிடங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் படித்த இளைஞர்கள் தற்போது தங்கள் தகுதியை விட குறைந்த வேலையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை பெற காலஅவகாசம் நீட்டிப்பு

தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் மின்சார வாரியத்தின் அடிப்படையில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குதல், தினசரி மின்சார பராமரிப்பு போன்ற வேலைகள் செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஒப்பந்தமானது ஒரே தவணையில் ஒப்பந்த தொகை செலுத்தியபின் மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும் அதன்பின் அந்த ஒப்பந்ததாரர் கூறப்பட்ட விதி மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டால் மீண்டும் ஒரு வருடம் நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்புள்ளியை கண்காணிப்பு பொறியாளர் உறுதி செய்வார். இதற்கான தொகை, பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களோடு ரூ.1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு செய்யும் துணை பிரிவு அலுவலகங்களில் 25 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான காலி பணியிடம் இருந்தால் அவர்கள் இரண்டு பிரிவு அலுவலகங்களை பராமரிக்க வேண்டும். அதே நேரம் 25 சதவீதத்துக்கும் குறைவான காலி பணியிடம் உள்ள அலுவலகத்தின் பணிகளை மின்வாரிய அலுவலர்களே கவனித்துக்கொள்ள வேண்டும். தேர்வாகும் ஒப்பந்ததாரர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறைந்தது 20 ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.412 எனும் வகையில், மாதம் ரூ.12,360 ஊதியமாக வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை!

இதன் விளைவாக, தனியார் நிறுவனம் அல்லது ஏஜென்சி 12 ஆயிரம் பேரை தேர்வு செய்ய அனுமதி அளித்தால், அவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை மின்சார ஊழியர் சங்க பிரதிநிதிகள் எழுப்பி உள்ளனர். இதன்மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. எல்லாமே தனியார் மயம்
    ஆட்சி மற்றும் அரசு மயம்
    அருமை அருமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!