TNPSC குரூப் 4 கணிதம் – வேலை & நேரம் கணக்குகள்.. இது தாம் முக்கியம்!!
TNPSC தேர்வுகளில் எப்போதும் தவறாது கேட்கப்படும் கேள்விகளில் வேலை & நேரம் தொடர்பான கணக்குகள் முக்கிய இடத்தை கொண்டுள்ளன. எளிய வடிவம் கொண்ட கணக்குகளாக இருந்தாலும், சிறிய ட்விஸ்ட் கொண்டதாக கேள்விகள் இருப்பதால் தேர்வர்கள் குழம்பி விடுகின்றனர். இந்த பிரச்சனையைப் போக்க எங்கள் வலைப்பதிவில் சில கணக்குகளின் மாதிரிகளை வழங்கியுள்ளோம். இதன் மூலம் பயன்பெறுமாறு தேர்வர்களை கேட்டுக் கொள்கிறோம்.
1) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 10 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 11 நாட்கள்
(D) 20 நாட்கள்
விடை – B
2) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
(A) 6 நாட்கள்
(C) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
(D) 3 நாட்கள்
விடை – D
3) ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 18 நாட்கள்
(B) 19 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 24 நாட்கள்
விடை – D
4) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பன் இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ. 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன?
(A) 240.360
(B) 300, 300
(C) 360, 240
(D) 400, 200
விடை – C
5) ஒரு வேலையை 8 நாட்களிலும், Y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பர் இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ 42,000 பெறுகிறார்கள். Yக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
(A) 24,000
(B) 18,000
(C) 20,000
(D) 22,000
விடை – B