தமிழகத்தில் 50 லட்சம் பெண்கள் தினசரி இலவச பேருந்து பயணம் – பாராட்டிய கேரளா குழு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட கேரளா குழுவினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஆய்வு குழு:
தமிழக அரசு 2021ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு முதல் பணியாக அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டமானது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தினசரி பல லட்சக்கணக்கான பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருவதால், அரசுக்கு அதிக அளவில் செலவினம் ஏற்பட்ட போதிலும், அரசு இதனை தொடர்ந்து செயல்படுத்துவதாக தெரிவித்தது.
ஏப்ரல் முதல் அமலுக்கு வந்த பழமையான வாகனங்கள் தடை உத்தரவு – சிரமத்தில் பொதுமக்கள்!
இந்நிலையில், கேரளா போக்குவரத்துத்துறை செயலாளர் தலைமையிலான குழு ஒன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் இலவச பேருந்து பயண திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்பு குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆய்வின் முடிவில் தினசரி 50 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்வதை அறிந்து ஆச்சர்யம் அடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.