அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை – நகை வாங்க சரியான நேரம் இது.. விவரம் உள்ளே!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்,
தங்கம் விலை:
தமிழகத்தில் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஆபரணத் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்ரல் 03) இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஆபரணத்தங்த்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 200 சரிந்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் தகவல்!
இதனையடுத்து இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ. ரூ.44,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.5,535க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ. 20 காசுகள் குறைந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.77,100க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரங்களில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளதால் இந்த தருணத்தை பயன்படுத்தி நகைப்பிரியர்கள் தங்க ஆபரணங்களை வாங்க முற்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download