தமிழகத்தில் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் – அமைச்சர் அளித்த விளக்கம்!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் பெண்கள் இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், பயண விகிதம் 40 சதவிகிதத்தில் இருந்து 64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது
இலவச பேருந்து திட்டம்:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டமானது பள்ளிக்கு செல்லும் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
தொடக்கத்தில் அரசு பேருந்துகளில் 40% பெண்கள் பயணம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின் இந்த திட்டம் செயல்படுத்த தொடங்கிய பின் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது 64 சதவிகித பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் மூலம் பெண்களின் பொருளாதாரத்திற்கு உதவியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீன நாட்டின் 232 செயலிகளை பயன்படுத்த தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!!
மேலும் பேசிய அவர் இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர் என தெரிவித்தார். இந்த திட்டம் மூலம் பெண்களுக்கு 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.