தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு- 100 பணியிடங்கள்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
TNCSC கள்ளக்குறிச்சி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Seasonal List Clerk, Seasonal Helper and Seasonal Keeper பணிகளுக்கென 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- TNCSC கள்ளக்குறிச்சி ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் பணிகளுக்கான 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 th,12 th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,மேலும் பல்கலைக்கழகத்தில் B.Sc in Agriculture and Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கள்ளக்குறிச்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 3,499 /– முதல் அதிகபட்சம் ரூ.5,285/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.7 கடைசி நாள்!
Follow our Instagram for more Latest Updates
TNCSC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க நாளை (07.02.2023) இறுதி நாள் என்பதால் உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்