DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – விரைவில் விண்ணப்பியுங்கள்!
DRDO கீழ் செய்யப்பட்டு வரும் அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனத்தில் (INMAS) ஏற்பட்டுள்ள Junior Research Fellow (JRF) காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Defence Research and Development Organisation (DRDO) |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
DRDO-INMAS காலிப்பணியிடங்கள்:
அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனத்தில் (INMAS) Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
JRF வயது வரம்பு:
- 26.08.2022 அன்றைய நாளின் படி, 28 வயதிற்குள் உள்ள நபர்கள் மட்டுமே இந்த பணிக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.DRDO-INMAS கல்வி தகுதி:
- Junior Research Fellow (JRF) பணிக்கான தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Dental Science பாடப்பிரிவில் Bachelor’s Degree (BDS) முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் உள்வைப்பு மற்றும் பல் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சி பணிகளில் அனுபவம் உள்ளவராகவும், DCI-ல் தங்களது Degree-யை பதிவு செய்தவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
JRF சம்பளம்:
ரூ.31,000/- JRF பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக தரப்படும்.
TNPSC Coaching Center Join Now
DRDO-INMAS தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 26.08.2022 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
JRF விண்ணப்பிக்கும் விதம்:
JRF பணிக்கான தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் மற்றும் நேர்காணல் நடைபெறும் நேரத்திற்கு முன் (8.00 – 9.00) அலுவலகத்தில் நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.