உயிருக்கு ஆபத்தான இறுதி நிமிடங்களில் கோதை, அதிர்ச்சியில் தமிழும் சரஸ்வதியும் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் கோதை போட்ட சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதால் அவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கிறார். இந்நிலையில் கோதையின் இறுதி நிமிடங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழை படிக்காதவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள யாரும் விரும்பாமல் இருக்கின்றனர். அப்போது கோதை தமிழிற்கு நல்ல படித்த பெண்ணை தான் திருமணம் செய்து வைப்பேன் என சபதம் போடுகிறார். அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என நினைத்து பெண் தேடுகிறார். ஆனால் தமிழ் பன்னிரெண்டாம் வகுப்பு பெயில் ஆன சரஸ்வதியை காதலிக்கிறார். தமிழின் அம்மாவிற்கும் சரஸ்வதியை பிடிக்க திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது.
கதிருக்காக ஆசையுடன் சட்டை தைத்து கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் சரஸ்வதி எம்பிஏ படித்திருப்பதாக கோதை தவறாக நினைத்து கொண்டிருக்கிறார். அதனால் முழு வேகத்துடன் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் சீரியலில் வில்லியான சந்திரகலா சரஸ்வதி பற்றிய உண்மையை சொல்லி திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கிறார். அதனால் பல முயற்சிகளை செய்து சரஸ்வதி பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறார். ஆனாலும் அனைவரும் எதிர்பார்த்தப்படி திருமணம் நடைபெறுகிறது.
திருமண முடிவில் சரஸ்வதி பற்றிய உண்மையை சந்திரகலா சொல்ல, தமிழ் காதலித்த விஷயமும் தெரிய வருகிறது. அதை கேட்டு கோதை அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு போகிறார். கோதை எழுந்து வந்து சரஸ்வதியை ஏற்றுக் கொள்வாரா என்பதே சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் கோதையின் இறுதி நிமிடங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கோதை உடல்நிலை சரியாகி மீண்டு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.