விஜய் டிவியில் திடீரென நிறுத்தப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்! என்ன காரணம் தெரியுமா?
விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் வெளியாகி கொண்டிருக்கும் பிரைம் நேர சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக ‘பாக்கியலட்சுமி’ நெடுந்தொடர் 3 மணி நேர சிறப்பு எபிசோடாக ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எபிசோடு
இப்போதெல்லாம் அனைத்து டிவி சேனல்களிலும் வார இறுதி நாட்களை கூட சீரியல்கள் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது. பொதுவாக வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை முதல் மாலை வரை என அனைத்து நேரங்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாவது வழக்கம். அதுவே வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகள் டிவி சேனல்களில் இடம்பிடிப்பது உண்டு. ஆனால் இப்போதோ வாரத்தின் 7 நாட்களும் கூட சீரியல்களை ஒளிபரப்பும் சில தமிழ் சேனல்கள் இருக்கத்தான் செய்கிறது.
இதற்கெல்லாம் காரணம் சீரியல்கள் மூலம் கிடைக்கும் ரீச் மட்டும் தான். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகும் சீரியல்களை எல்லா நாட்களும் ஒளிபரப்பு செய்து TRP ரேட்டிங்கை தக்கவைத்து கொள்வதற்காக இது போன்ற விஷயங்களை டிவி சேனல்கள் கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் அதாவது மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால் வாரத்தில் 6 நாட்களும் இந்த குறிப்பிட்ட பிரைம் நேரங்களில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதன் படி, இரவு 7 மணிக்கு மேல் ‘ராஜா ராணி 2’, ‘தமிழும் சரஸ்வதியும்’, ‘மெளன ராகம்’, ‘பாக்கியலட்சுமி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற சூப்பர் ஹிட் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என்பதால் இவை எப்போதும் TRP ரேட்டிங்கிலும் முதன்மையான இடங்களை பிடித்து வருகிறது.
Vijay TV Bigg Boss 5 Promo | நாமினேஷனுக்கு பயப்படும் போட்டியாளர்கள், விவாதத்திற்கு தயாரான கமல்ஹாசன்!
இப்படி இருக்க இன்று (டிச.18) ஒரு நாள் மட்டும் விஜய் டிவியின் பிரைம் நேர சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சனிக்கிழமை தோறும் வழக்கத்தை போல இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இன்று நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மட்டும் சிறப்பு எபிசோடாக மாலை 6 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது. அதனால் வழக்கம் போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தை தெரிவித்து வருகின்றனர்.