TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் நான்காம் நிலை அரசுப் பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் Group 4 தேர்வு குறித்த தகவல் வெளியான நிலையில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம், கட்ஆப் முறை குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
TNPSC Group 4 தேர்வு விபரம்:
TNPSC தேர்வு வாரியத்தால் நான்காம் நிலை பதவிகளை நிரப்பும் விதமாக தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகின்றன. TNPSC தேர்வு வாரியாய்த்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் குரூப் 4 தேர்வில் மட்டுமே பெரும்பாலானோர் கலந்து கொள்கின்றனர். ஏனெனில் தேர்வு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாக கொண்டு நேரடி பணி நியமனம் செய்யப்படுவது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு TNPSC தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் ‘மேரா ரேஷன்’ செயலி – அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!
இந்நிலையில் பெரும்பாலானோர் இந்த தேர்வுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த தேர்வின் முறை, பதவிகள், கல்வித்தகுதி, பாடத்திட்டம் மற்றும் கட்ஆப் மதிப்பெண் குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
குரூப் 4 பதவிகள்:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்களுக்கு மட்டும் 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 30 வயது ஆகும். அரசின் விதிகளின்படி உள்ள இதர பிரிவினருக்கு 35 வரை வயது வரம்பு விலக்கு உண்டு. கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதனை தொடர்ந்து மேல்நிலை, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
TNPSC Coaching Center Join Now
தேர்வு முறை:
இந்த தேர்விற்கு மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அந்த 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்படங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொது அறிவு மற்றும் 25 வினாக்கள் திறனறி தேர்வு அடிப்படையில் கேட்கப்படும்.
பாடத்திட்டம்:
- மொழிப்படங்களில் கேட்கப்படும் 100 வினாக்களில் 45 மதிப்பெண் கட்டாயம் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- 75 பொது அறிவு வினாக்கள் அறிவியல், நடப்பு நிகழ்வு, வரலாறு, தென் இந்திய வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், உள்ளிட்டவைகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் இருந்து கேட்கப்படும்.
- 25 திறனறி வினாக்கள் தர்க்க அறிவு மற்றும் கணித பாடத்தில் இருந்து கேட்கப்படும். கணிதத்தில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம, தனிவட்டி, கூட்டுவட்டி, அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு, வேலை மற்றும் நேரம், வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள், இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம் போன்ற தலைப்புகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
கட் ஆப்:
குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி தான். ஆனால் மதிப்பெண் அடிப்படையில் பார்க்கும்போது பெரும்பாலானோர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு 165 மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.