அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை 2021 – 10வது தேர்ச்சி போதும்..!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மதுரை போக்குவரத்து மண்டலத்தில் காலியாக உள்ள Electrician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNSTC |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNSTC பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) சார்பில் வெளியான அறிவிப்பில் Electrician பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
TNSTC கல்வித்தகுதி:
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNSTC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.7,000/- முதல் ரூ. 7,001/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.