விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ போட்டியாளர்களின் ஒரு வார சம்பளம் இவ்வளவா? ஷாக் ரிப்போர்ட்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்கள் முடிந்து ஆறாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியால் நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. வெவ்வேறு மொழிகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் கடந்த அக்.3 ஆம் தேதி தொடங்கப்பட தற்போது ஆறாவது வாரம் நடைபெற்று வருகிறது. முதலில் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் இமான் அண்ணாச்சி – ரசிகர்கள் குமுறல்!
அதில் 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 13 போட்டியாளர்கள் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். கமல்ஹாசன் இந்த முறை ஆரம்பத்திலேயே போட்டியாளர்களை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுக்கான சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதாவது போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு வாங்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
- இசைவாணி – ரூ. 1 லட்சம்
- ராஜு ஜெயமோகன் – ரூ. 1.5 லட்சம்
- மதுமிதா – ரூ. 2.5 லட்சம்
- அபிஷேக் ராஜா – ரூ. 1.75 லட்சம்
- நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம்
- பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ. 2 லட்சம்
- அபிநய் – ரூ. 2.75 லட்சம்
- பாவனி ரெட்டி – ரூ. 1.25 லட்சம்
- சின்னப்பொண்ணு – ரூ. 1.5 லட்சம்
- நாடியா சங் – ரூ. 2 லட்சம்
- வருண் – ரூ. 1.25 லட்சம்
- இமான் அண்ணாச்சி – ரூ. 1.75 லட்சம்
- அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம்
- சுருதி – ரூ. 70,000
- ஐக்கி பெர்ரி – ரூ.70,000
- தாமரைச்செல்வி – ரூ.70,000
- சிபி – ரூ.70,000
- நிரூப் – ரூ.70,000