தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் விழுப்புரம், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்,ராணிப்பேட்டை, அருள்மிகு மாரியம்மன் கோவில், சமயபுரம் ஆகிய 4 கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கோயில்களில் Medical Officer, Staff Nurse, Multi Purpose Hospital Worker / Attender பதவிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Medical Officer, Staff Nurse, Multi Purpose Hospital Worker / Attender |
பணியிடங்கள் | 24 |
கடைசி தேதி | 19.11.2021, 22.11.2021 & 29.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 கோவில்களிலும் Medical Officer, Staff Nurse, Multi Purpose Hospital Worker / Attender பணிகளுக்கு என மொத்தமாக 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Medical Officer & Staff Nurse/ MLHP பணிகள் – 35 வயது
- Multi Purpose Hospital Worker / Attender – 40 வயது
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
TNHRCE கல்வித்தகுதி :
- Medical Officer – MBBS பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Staff Nurse/ MLHP – Diploma GNM முடித்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Multi Purpose Hospital Worker/ Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short Listing செய்யப்பட்டு பின்னர் Interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அந்தந்த கோவில்களுக்கான தேய்=திங்களை கீழே வழங்கியுள்ளோம்.
- அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் விழுப்புரம் – 19.11.2021
- அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் – 22.11.2021
- அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்,ராணிப்பேட்டை – 22.11.2021
- அருள்மிகு மாரியம்மன் கோவில், சமயபுரம் – 29.11.2021