சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு – இன்றைய நிலவரம்!
பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்றைய (அக்.16) விற்பனையில் சவரனுக்கு ரூ.400 வரை சரிவை கண்டு ஒரு சவரன் நகை ரூ.35.720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரம்
தமிழத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் தற்போது அனைத்து வகையான அத்தியாவசிய கடைகள் உட்பட மற்ற கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில மாத அடைப்புக்கு பிறகு நகைக் கடைகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நாட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஆபரணதங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.
CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு கால அட்டவணை!
அதனால் நகை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வப்போது விலை குறித்த சந்தேகங்கள் எழுந்து வருகிறது. அதற்காக நகை வாங்க செல்லும் முன்பு அன்றைய நாளுக்கான விற்பனை நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் இன்றைக்கான (அக்.16) விற்பனையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியான வீழ்ச்சியை கண்டுள்ளது.
அக்.21ம் தேதி 8 முதல் 11ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இன்றைய விற்பனை நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 வரை குறைந்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,465க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35.720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சென்னையில் இன்று (அக்.16) சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.