Google Doodle இல் சிவாஜி கணேசன் – பிறந்தநாளில் கவுரவித்த கூகிள்! ரசிகர்கள் வாழ்த்து!
முன்னணி தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு அவரை கவுரவபடுத்தியுள்ளது.
கூகுள் டூடுல்:
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருவது கூகுள். முக்கிய தினங்களின் போதும் முக்கிய பிரமுகர்களின் பிறந்த தினத்தில் கூகுள் தனது பக்கத்தில் வித்தியாசமான டூடுல்களை வெளியிடுவது வழக்கம். அதனை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 93வது பிறந்த நாளான இன்று கூகுள் டூடுல் வெளியிட்டு அவரை கவுரவபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: அதிரடியாக ரூ.448 உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான சிவாஜி கணேசன் 300 திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். தாதா சாகேப் பால்கே முதல் சர்வதேச விருதுகள் வரை பெற்ற முன்னணி நடிகர். சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி போன்ற கதாபாத்திரங்களில் வாழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 26,727 பேருக்கு கொரோனா! 277 பேர் உயிரிழப்பு!
அவரை கௌரவப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட டூடுலில் சிவாஜியின் மூன்று கெட்டப் அடங்கிய ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் வரையப்பட்டுள்ளது. ஓவியர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி இந்த டூடுலைத் தயாரித்ததாக கூகுள் கூறுகிறது. அவரது இந்த தயாரிப்பு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சினிமா துறையினர் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த நிகழ்வினை கொண்டாடி வருகின்றனர்.