கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – PIB எச்சரிக்கை!

0
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - PIB எச்சரிக்கை!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - PIB எச்சரிக்கை!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – PIB எச்சரிக்கை!

ஒரு போலியான எச்சரிக்கை தகவல் ஒன்று வாட்ஸ் ஆப்பில் பெரிதாக பகிரப்பட்டு வருகிறது. இந்த எச்சரிக்கை தகவல் உண்மையில்லை என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை வைத்து இந்த மோசடி நடைபெறுகிறது.

போலி எச்சரிக்கை:

இந்தியாவில் பலவித மோசடிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைய நவீன காலத்தில் அதிகரித்து வரும் இன்டர்நெட் பயன்பட்டால் மோசடிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. படித்த நபர்கள் கூட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராயாமல் நம்புகின்றனர். மேலும் அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர். வேலை பெற்று தருவதாக கூறி சில கும்பல் சமூக வலைத்தளங்களில் குழுக்களை உருவாக்கி ஏமாற்றுகின்றனர். அதிக சம்பளம் கிடைக்கும் நிரந்தர வேலை போன்ற தவறான தகவல்களை பகிர்கின்றனர்.

செப்.22ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!

இது ஒரு புறம் இருக்க வதந்திகள் அதிகம் பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து 138 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 18.07 சதவீதம் வதந்திகள் பரவிள்ளது. அதிக இன்டர்நெட் வசதி, இன்டர்நெட் பற்றிய குறைவான அறிவு ஆகிய காரணங்களால் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எண் ஒன்றை அழுத்தவும் என்ற மோசடி எச்சரிக்கை தகவல் வாட்ஸ்ஆப்பில் பல குழுக்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பகிரப்பட்டு வருகிறது.

வீட்டுக்கு ஒரு அரசு பணி, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.3000 – முதல்வர் உறுதி!

அதாவது 912250041117 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டீர்களா என்று கேள்வி எழுப்பி, ஆம் என்றால் எண் ஒன்றை அழுத்தம் வேண்டும் என்று கூறினார்கள் எண் ஒன்றை அழுத்தியதும், செல்லிடப்பேசி செயலற்றுப் போனது இவ்வாறு தன் நண்பனுக்கு நேர்ந்துள்ளது என்ற போலி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையில்லை என்று சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்குறிப்பிட்ட எண், தற்போது செயல்பாட்டில் இல்லை, எனவே இந்த மோசடி குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!