WI vs PAK 2வது டெஸ்ட் : விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

0
WI vs PAK 2வது டெஸ்ட் விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
WI vs PAK 2வது டெஸ்ட் விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

WI vs PAK 2வது டெஸ்ட்: விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!

விண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் போதும் கடைசி டெஸ்ட் போட்டியில் 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான். விண்டீஸ் அணி அதை நோக்கி விளையாடி வருகிறது.

WI vs PAK 2nd டெஸ்ட்:

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் முதலாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. அதில் விண்டீஸ் அணி 1 விக்கெட் விதியஸ்தத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக ரமீஸ் ராஜா நியமனம்? ஆலோசனைக்கு பின் தகவல்!

இந்நிலையில் தற்போது இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க கட்ட பேட்ஸ்மேன்களான அபித் அலி, இம்ரான் மற்றும் அசார் அலி ஆகியோர் முறையே 1, 1 மற்றும் ரன்கள் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து அட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணியை கேப்டன் பாபர் மற்றும் ஆலம் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர்.

நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிய இருவரும் விக்கெட் சரிவை கட்டுப்படுத்தி ரன்களை சேகரித்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அணியின் ஸ்கோர் 168 ரங்களாக உயர்ந்த போது கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களில் (174 பந்துகள், 13 பவுண்டரி) ரோச் பந்து வீச்சில் ஹோல்டரிடம் கேட்ச் ஆகினார்.

CSK Vs MI : மும்பை இந்தியன்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சென்னை! எதில் தெரியுமா?

பாகிஸ்தான் அபாரம்:

அடுத்து வந்த ரிஸ்வான், பஹீம் ஆகியோரின் உதவியுடன் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலம் சதம் அடித்தார். மற்ற வீரர்களும் தங்களின் கணிசமான பங்களிப்பை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. சதமடித்த ஆலம் 124 ரன்களுடன் (213 பந்துகள், 17 பவுண்டரி) அவுட்டாகாமல் களத்தில் நின்றார். விண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரோச் மற்றும் சீல்ஸ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு பொன்னர் (37), பிளாக்வுட் (33), ஹோல்டர் (27) தவிர அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேற 51.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Tokyo Paralympics 2020 India Full Schedule: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!

தொடர்ந்து 152 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கிய பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களின் கணிசமான பங்களிப்பை கொண்டு 176/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. இதனால் விண்டீஸ் அணிக்கு 328 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விண்டீஸ் அணி 19 ஓவர்களுக்கு 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் ஜொலிக்கும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்த வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!